தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை

தூத்துக்குடி, நவ.27: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன்  எம்எல்ஏ வெளியிட்ட  அறிக்கை:  திமுக இளைஞர் அணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  பிறந்த நாளை முன்னிட்டு  தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் திமுக இளைஞர் அணி சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட உள்ளன. அதன்படி இன்று (27ம் தேதி) காலை 7 மணிக்கு  தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் மாவட்ட, மாநகர இளைஞர் அணி சார்பில் கேக்  வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு விளாத்திகுளம்  கிழக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் சூரங்குடி ஊராட்சியில் கழக  கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குதல்.

இதேபோன்று கயத்தாறு கிழக்கு  ஒன்றிய இளைஞர் அணி சார்பில் கயத்தாரில் கேக் வெட்டுதல் மற்றும் 100 ஏழைகளுக்கு  அரிசி, பருப்பு வழங்குதல். மதியம் 12 மணிக்கு புதூர் மேற்கு ஒன்றிய  இளைஞர் அணி சார்பில்     நாகலாபுரத்தில் உள்ள தேனம்மாள் முதியோர் இல்லத்தில்  அறுசுவை உணவு வழங்குதல். கோவில்பட்டி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் லாயல்  மில் காலனியில் 100 ஏழைகளுக்கு மதிய உணவு வழங்குதல்,ஓட்டப்பிடாரம்  கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் குறுக்குச்சாலை மற்றும் பசுவந்தனையில்  கேக் வெட்டுதல் மற்றும் 300 ஏழைகளுக்கு பிரியாணி சாப்பாடு மற்றும்  வேஷ்டிகள் வழங்குதல், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில்  நாகலாபுரம் தேனம்மாள் முதியோர் இல்லத்திற்கு காலை மற்றும் இரவு உணவு  வழங்குதல்.  கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில்      எட்டயபுரம்  மனநலக் காப்பகத்திற்கு மதிய உணவு வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள்  நடக்கிறது.

 நாளை (28ம் தேதி) காலை 10 மணிக்கு   கோவில்பட்டி நகர  இளைஞர் அணி சார்பில் 27ம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் பிறக்கும்  அனைத்து குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் வழங்குதல். டிசம்பர் 6ம் தேதி   தூத்துக்குடி வடக்கு மாவட்ட, மாநகர இளைஞர் அணி சார்பில் கலைஞர் அரங்கத்தில்  ரத்த தான முகாம்நடக்கிறது. டிசம்பர் 2 முதல் 7 ம்தேதி வரை  தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் விளாத்திகுளம்  தொகுதியில் மருத்துவ முகாம், ரத்த தான முகாம், விளையாட்டுப் போட்டிகள்  மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், டிசம்பர் 27ம் தேதி புதூர் கிழக்கு  ஒன்றிய இளைஞர் அணி சார்பில் புதூர் நகரத்தில் கழக கொடியேற்றி நலத்திட்ட  உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றார்.

Related Stories: