×

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வெள்ளாளன்விளையில் வாலிபால் போட்டி ஆனந்தமகேஸ்வரன் துவக்கிவைத்தார்

உடன்குடி,நவ.27:  தெற்கு மாவட்ட திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 43வதுபிறந்த நாளையொட்டி 36 அணிகள் பங்கேற்ற வட்டார அளவிலான வாலிபால் போட்டி உடன்குடி அருகே வெள்ளான்விளை பிஷப் அசரியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கியது.
 துவக்க விழாவுக்கு உடன்குடி யூனியன் சேர்மனும், ஒன்றிய செயலாளருமான பாலசிங் தலைமை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், திமுக ஒன்றியச் செயலாளர்கள் திருச்செந்தூர் ரமேஷ், கருங்குளம் இசக்கி பாண்டியன், ஆழ்வை நவீன்குமார், வெள்ளாளன்விளை பஞ்சாயத்து தலைவர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தனர். வெள்ளாளன்விளை சேகரகுரு மோசஸ் ஜெபராஜ், ஜாலின் ஆரம்ப ஜெபம் செய்தனர். இதையடுத்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏவின் மகன் ஆனந்த மகேஸ்வரன் போட்டியைத் துவக்கிவைத்தார்.

 இதில் நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் மகாவிஷ்ணு, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜெசிபொன்ராணி, செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிராஜா, இளங்கோ, மாணவர் அணி துணை அமைப்பாளர் முகைதீன், சிறுபான்மை பிரிவு ஒன்றிய துணை அமைப்பாளர் லியாஸ்கர், மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், முன்னாள் கவுன்சிலர் சலீம், நகர பொருளாளர் தங்கம், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் பாய்ஸ், இளைஞர் அணி நகர அமைப்பாளர் அஜய், இளைஞர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர் மனோஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இன்று (27ம் தேதி) இரவு நடக்கும் பரிசளிப்பு விழாவில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பரிசுவழங்குகிறார்.
Tags : Ananthamakeswaran ,volleyball tournament ,Vellalanvilai ,Udayanithi Stalin ,birthday ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பசுவந்தனையில் மாவட்ட கைப்பந்து போட்டி