×

பாவூர்சத்திரம் வென்னிமலை கோயிலில் இன்று வருஷாபிஷேகம்

பாவூர்சத்திரம், நவ.27: பாவூர்சத்திரம் காமராஜ்நகர் வென்னிமலை வள்ளி, தேவசேனா, சமேத சுப்பிரமணியசுவாமி கோயிலில் 7ம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று (27ம்தேதி) நடக்கிறது.வருஷாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 7 முதல் 10 மணி வரை கணபதி ஹோமம், ஸூத்தம், புருஷ ஸூத்தம், பூர்ணாகுதி, தீபாராதனையும், 10 மணி முதல் 12 மணி வரை மூலவர், பரிவார மூர்த்திகள் மற்றும் விமானங்கள் ஆகியவைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags : Pavoorchatram Vennimalai Temple ,