×

கடையம்,பொட்டல்புதூரில் இந்திரா காந்தி பிறந்த நாள்

கடையம்,நவ.27: கடையம், பொட்டல்புதூர், திருமலையப்பபுரம் பகுதிகளில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கடையத்தில்  வட்டார மகளிரணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கடையம் வட்டார மகளிரணி தலைவி சீதாலட்சுமி பார்வதிநாதன் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் முருகன், அழகுதுரை முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்திரா காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பொட்டல்புதூர், திருமலையப்பபுரத்தில் நடந்த  நிகழ்ச்சிக்கு கடையம் வட்டார தலைவர்கள் முருகன், அழகுதுரை ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் இந்திரா காந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மூத்த தலைவர் ஆதிமூலம்,  கடையம் வட்டார பஞ்சாயத் ராஜின் ஒருங்கிணைப்பாளர் எம்.எல் முருகன், சாத்தா, பாத்திரகடை முருகன், அந்தோணிராஜ், சோமசுந்தரம், மாரிகணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது.


Tags : Indira Gandhi ,birthday ,Kadayam ,Pottalputhur ,
× RELATED இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை....