×

பைக் மீது வாகனம் மோதி வாலிபர் பலி

பாவூர்சத்திரம். நவ.27: கீழப்பாவூர் சந்தைதோப்பு கீழத்தெருவைச் சேர்ந்தவர்கள் ராமர் மகன் சுடலைஈசன் (19), சமுத்திரம் மகன் பெரியசாமி (29). நண்பர்களான இருவரும் அங்குள்ள அரிசி ஆலைகளில் சாம்பல்களை வாங்கி விவசாயிகளுக்கு விற்கும் தொழில் செய்து வருகின்றனர்.

நேற்று இரவு கீழப்பாவூரில் இருந்து இருவரும் பைக்கில் மகிழ்வண்ணநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே கீழப்பாவூரை நோக்கி வந்த வாகனம் பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சுடலைஈசன் சம்பவ இடத்திலேயே பலியானார். பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து வந்து சுடலைஈசன் உடலை  கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வாகன திருடர்கள் 2 பேர் கைது