×

திருப்புத்தூரில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து வாகன ஓட்டிகள் அச்சம்

திருப்புத்தூர், நவ.27: திருப்புத்தூரில் ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதித்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.திருப்புத்தூரில் ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளு க்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்ணா சிலை, யூனியன் அலுவலகம் எதி ரே, காந்தி சிலை, அஞ்சலக வீதி, மதுரை ரோடு, தாலுகா அலுவலகம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. அவற்றில் சில கோயில் மாடுகளாகவும் பெரும்பாலானவை வீடுகளில் வளர் க்கப்படும் பசுக்களாகவும் உள்ளன. இந்த மாடுகள் சுவரொட்டிகளையும் காந்திசிலை, அண்ணாசிலை, மதுரை ரோடு பகுதிகளில் வியாபாரிகள் வீசும் அழுகிய பழங்கள், காய்கறிகள், ஹோட்டல் இலைகளை தின்று சுற்றி திரிகின்றன.

இந்த மாடுகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் அச்சப்படும் நிலை உள்ளது.இரவில் நடுரோட்டில் மாடுகள் படுத்துவிடுகின்றன. அவற்றை கவனிக்காமல் வேகமாக வரும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் சுற்றித்திரியும் மாடுகளை பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,accident ,road ,
× RELATED சென்னை மற்றும் புறநகர் சாலைகளில்...