×

தேவையான அளவு மட்டுமே உரம் வாங்கிட வேண்டும் வேளாண்துறை அறிவுறுத்தல்

சிவகங்கை, நவ.27: சிவகங்கை மாவட்ட வேளா ண்மை இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தற்போது 65 ஆயிரம் எக்டேர் நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேவையான உரங்களான யூரியா-3 ஆயிரத்து 936 மெட்ரிக் டன், டிஏபி-625 மெட்ரிக் டன், பொட்டாஸ்-ஆயிரத்து 37 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ்-2 ஆயிரத்து 513 மெட்ரிக் டன் ஆகியவை இருப்பு வைத்து விநியோகம் செய்யப்படுகிறது. உரம் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் எண் கொண்டு விற்பனை முனைய இயந்திரம் மூலம் உரம் விநியோகம் செய்திடும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளை அணுகலாம். போதிய உரங்கள் இருப்பு உள்ளது. உரம் பெறுவதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் 94420 75075 (சிவகங்கை), 74648 27909(காளையார்கோயில்), 978842 8856(மானாமதுரை), 99942 04904(தேவகோட்டை), 99942 04904(கல்லல்), 94429 68758(சாக்கோட்டை), 97884 28856(இளையான்குடி), 86102 54453(திருப்புவனம்), 95976 63484(திருப்பத்தூர்), 98943 45383(கண்ணங்குடி), 95976 63484(சிங்கம்புணரி), 95976 63484(எஸ்.புதூர்) ஆகிய செல் எண்களில் புகார் தெரிவிக்கலாம். மானிய விலையில் வழங்கப்படும் யூரியா உரத்தை பயிர் சாகுபடி செய்திடும் அளவுக்கு மட்டுமே விவசாயிகள் வாங்கி பயன்படுத்திட வேண்டும். மானியத்தில் வழங்கப்படும் யூரியா உரம் விவசாயிகள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதங்களில் உரம் அதிக அளவு பெற்ற விவசாயிகளிடம் அதன் தேவையின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் தனியார் உர விற்பனையாளர்கள் யூரியா உரத்தை தேவைக்கு அதிகமாக கூடுதலாக விற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.Tags :
× RELATED ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்