×

உணவில் கலப்படமா? புகார் தெரிவிக்கலாம்

திருப்புத்தூர், நவ.27: திருப்புத்தூரில் உணவுப் பொருட்களின கலப்படம், தரம் பற்றி புகார் தெரிவிக்க கடைகளில் நோட்டீஸ் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருப்புத்தூரில் உள்ள அனைத்து உணவகங்கள், டீ கடைகள், பேக்கரி கடைகள், மளிகை கடை ஆகிய இடங்களில் தரம் குறைவான பொருட்களை விற்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இதற்காக நகர் உள்ள அனைத்து உணவகங்கள், டீ கடைகள், பேக்கரி கடைகள், மல்லிகை கடை ஆகிய இடங்களில் புகார் குறித்த நோட்டீசை உணவு பாதுகாப்பு அலுவலர் இப்ராஹிம் உள்ளிட்டோர் ஒட்டி வருகின்றனர்.

Tags :
× RELATED டயட்... நல்லதா? கெட்டதா?