×

தரணி முருகேசன் இல்ல

ராமநாதபுரம், நவ.27:  ராமநாதபுரம் தரணி வேளாண் ஆராய்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தரணி புட் புராடக்ட்ஸ் நிறுவனர் தரணி முருகேசன்-ஆசிரியை பாக்கியவதி. இவர்களது மகனும் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளருமான முரளிதரனுக்கும், நெடுஞ்சாலைத்துறை நிர்வாக அலுவலர் புவனேசுவரன்-பொறியாளர் பானுமதி ஆகியோரின் மகள் யோகலட்சுமியின் திருமணம் ராமநாதபுரம் கேணிக்கரை யாபா மகாலில் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களை கணேசன், ஜானகி, ராஜேஷ், கங்காதரணி, என்ஜினீயர் நித்யாதரன், மோகனதரணி, ஜான்வி, கார்த்திக் செல்வகுமார், மேகா ஆகியோர் வரவேற்றனர்.
தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் ரமேஷ்பாபு, மூத்த வழக்கறிஞர் சுந்தர் கிருஷ்ணா உள்பட அனைத்து சமுதாய முக்கிய பிரமுகர்கள்,ஆன்மிக பெரியோர்கள், கீழக்கரை உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்க உறுப்பினர்கள், முஸ்லிம் ஜமாத்தார்கள், டேர் பவுண்டேசன் மற்றும் தரணி புட் புராடக்ட்ஸ் அலுவலர்கள், ஊழியர்கள், மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மணவீட்டார் சார்பில் தரணி முருகேசன் நன்றி கூறினார். திருமணம்Tags : Dharani Murugesan ,