×

கீழக்கரை நகராட்சி கூட்டம்

கீழக்கரை, நவ.27:   கீழக்கரை நகராட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை பொதுமக்கள் காலதாமதமின்றி செலுத்த வேண்டும். காவிரி கூட்டு குடிநீரை சட்டவிரோதமாக மின் மோட்டார் வைத்து உறிஞ்சி எடுப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சேதமடைந்த அனைத்து சாலைகளும் விரைவில் சீர் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி, பொறியாளர் மீரா அலி உள்பட அனைத்து ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

Tags : Coast Municipal Meeting ,