×

அரசு பள்ளியில் படித்த இரண்டு மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம்

கமுதி, நவ.27:  கமுதி அருகே டி.வல்லக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் அருண்குமார் நீட்தேர்வில் 282 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இவருக்கு இடஒதுக்கீட்டில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதேபோல் ராமசாமிபட்டியை சேர்ந்த ஜவுளி வியாபாரி விநாயகவேல். இவரது மகன் முத்துப்பாண்டி கடந்த வருடம்  நீட்தேர்வு எழுதி தோல்வியடைந்து, பின்னர் பெரம்பலூரில் உள்ள விவசாய கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பின்னர் விடாமுயற்சியுடன் இந்த வருடம்  மீண்டும் நீட்தேர்வு எழுதி 236 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று தமிழக அரசு அறிவித்திருந்த 7.5 இடஒதுக்கீடு அடிப்படையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது.

Tags : government school ,
× RELATED திருவண்ணாமலை அரசு மருத்துவ...