×

பாலமேட்டில் சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர். நவ.27: மதுரை பாலமேட்டில் ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.விநாயகர், முருகன், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. முதல் நாள் யாகசாலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து யாகசாலையில் இருந்து காசி, ராமேஸ்வரம், அழகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் மேளதாளம் இசையுடன் வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

இதில் சுற்று வட்டார மற்றும் வெளி மாவட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும், அன்னதானமும் வழங்கப்பட்டன. ஏற்பாட்டினை ஷீரடி சாய்பாபா ஆலய நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags : Sai Baba Temple Kumbabhishekam ,Palamet ,
× RELATED பாலமேட்டில் நாளை நடைபெற உள்ள...