×

விடுபட்ட மாணவ, மாணவியருக்கு 2வது முறையாக மருத்துவ கவுன்சலிங் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தல்

மதுரை, நவ. 27: விடுபட்ட மாணவ, மாணவியர்களுக்கு 2வது முறையாக மருத்துவ கவுன்சலிங் நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் சார்பில் மாவட்ட கல்வி நிர்வாகம் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தனியார் கல்லூரியில் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என்று முன்னரே அறிவித்து இருந்தால், மருத்துவ படிப்பில் சேர்ந்து இருப்போம் என்று 7.5சதவீத இடஒதுக்கீடு வாய்ப்பிருந்தும் பணமில்லாமல் மருத்துவ படிப்பை தவற விட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவ்வகையில், விக்கிரமங்கலம் கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவி தங்கபேச்சி உட்பட 7 பேர் மருத்துவம் படிக்க அரசு உதவவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுதொடர்பாக 2வது மருத்துவ கலந்தாய்வை நடத்த அரசை வலியுறுத்த வேண்டும் என கலெக்டருக்கு கல்வி வட்டார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : student ,Medical Counseling Education Officers ,
× RELATED குளிக்க சென்றபோது கல்லூரி மாணவி பலி: தோழிகள் 2 பேர் மீட்பு