×

கள்ளழகர் கோயில் உண்டியல் திறப்பு

அலங்காநல்லூர், நவ. 27: மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் திருக்கல்யாண மண்டப வளாகத்தில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் 46 லட்சத்து 27 ஆயிரத்து 803 ரூபாயும், தங்கம் 25 கிராம், வெள்ளி 410 கிராமும் இருந்தது.உண்டியல் திறப்பின் போது கோயில் நிர்வாக அதிகாரி அனிதா, உதவி அதிகாரி விஜயன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை மேலாளர்கள் உடனிருந்தனர்.உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள், பெண்கள் பக்தர் பேரவையினர், வங்கி ஊழியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து ஈடுபட்டிருந்தனர்.

Tags :