×

எல்ஐசி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

 மதுரை, நவ.27: மதுரையில் எல்ஐசி ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.எல்ஐசியில் உள்ள அரசின் பங்குகளை விலக்கிக்கொள்வது உள்ளிட்ட முடிவுகளை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் எல்ஐசி ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி செல்லூர் மண்டல அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை கோட்ட அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு கோட்ட சங்க தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ரமேஷ், கோட்ட சங்க பொதுசெயலாளர் ரமேஷ்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் முகவர்கள் ஆதரவு தந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : LIC ,
× RELATED காலாவதியான பாலிசியை புதுப்பிக்க எல்ஐசி அவகாசம்