×

திண்டுக்கல்லில் திமுக வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல், நவ. 27: திண்டுக்கல்லில் உள்ள தனியார் கூட்டரங்கில் திண்டுக்கல்-தேனி மாவட்ட திமுக வழக்கறிஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ, தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத்தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் இளங்கோ கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் நிர்வாகிகளை சிறப்பாக செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags : DMK Advocate Consultative Meeting ,Dindigul ,
× RELATED திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியைக்கு கொரோனா