×

குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள் டிஐஜி அறிவுரை

திண்டுக்கல், நவ. 27: சாணார்பட்டி அருகே குரும்பப்பட்டியில் சர்வதேச குழந்தைகள் தினம், குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி காவல்துறை, தமிழ்நாடு அலையன்ஸ் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. இதில் கலந்து கொண்ட திண்டுக்கல் சரக டிஐஜி முத்துச்சாமி, ‘கனவை கலைப்பதேன்’ என்ற குழந்தை திருமண விழிப்புணர்வு பாடலையும், ‘நம்ம பாதுகாப்பு நம்ம கையில்’ என்ற குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் குறும்படத்தையும் வெளியிட்டார். தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு, பிரச்னைகளை காவல்துறையிடம் புகார் கூற 94875- 93100 என்ற சிறப்பு எண்ணையும் அறிமுகப்படுத்தி டிஐஜி பேசுகையில், ‘பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தினமும் நேரம் செலவழித்து மனம் விட்டு பேசும் சூழலை உருவாக்க வேண்டும். கிராமத்தில் அனைவரும் இணைந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.  

மைனர் திருமணம், பாலியல் ரீதியான துன்புறுத்தல் உள்ளிட்ட குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க பெற்றோர்கள் முன்வந்து போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க வேண்டும்’ என்றார். பின்னர் ஏடிஎஸ்பி வெள்ளைசாமி, டிஎஸ்பி வினோத், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, பாதுகாப்பு அலுவலர் முருகேஸ்வரி, பேராசிரியர் மனோகரன் வாழ்த்துரை வழங்கினர். அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன், இணை இயக்குனர் ஹெலன், சைல்டு வாய்ஸ் அண்ணாதுரை, தமிழ்நாடு அலையன்ஸ் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிபிஜா பென்சிகர் நன்றி கூறினார்.

Tags : children ,DIG ,
× RELATED டிஐஜி ஆனிவிஜயா பங்கேற்பு 10 பேர் டிஸ்சார்ஜ்