வேடசந்தூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை: 4 மின்கம்பங்கள் சாய்ந்தன

வேடசந்தூர், நவ. 27: வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு மரக்காணம் அருகே கல்பாக்கத்தில் கரையை கடந்தது. நள்ளிரவு முதல் நேற்று முழுவதும் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் வடமாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை நிவர் புயலால் நேற்று வேடசந்தூர் பகுதியில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் வேடசந்தூர் அருகே அரியபந்தம்பட்டி பகுதியில் 3  மின்கம்பங்கள் சாய்ந்தன. இதேபோல் நாகம்பட்டி தேசிய நான்கு வழிச்சாலை அருகே மி்ன்கம்பம் ஒன்று சாய்ந்தது. இதையடுத்து 2 இடங்களிலும் உடனே மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் மின்கம்பங்கள் சாய்ந்த சமயம் சாலையில் யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மழை நின்ற பின் மின்வாரிய ஊழியர்கள், அனைத்து மின்கம்பங்களையும் மாற்றி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: