ஓடையில் குளித்த வாலிபர் மாயம் தேடும் பணி தீவிரம்

திண்டிவனம், நவ. 27: விக்கிரவாண்டி அருகே பம்பையாற்று ஓடையில் குளித்த வாலிபர் மாயமானதால் தீயணைப்பு துறையினர் வாலிபரை தீவிரமாக தேடி

வருகின்றனர்.விழுப்புரம் தாலுகா வளவனூர் அருகே உள்ள வி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன், விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் மணிவேல்(22), மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நிவர் புயல் காரணமாக நேற்று முன்தினம் பெய்த மழையினால் கிராமத்தின் அருகே உள்ள வி.மாத்தூர் பம்பையாற்று ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை 10 மணியளவில் மணிவேல் தன் நண்பர்களோடு சென்று ஓடையில் இறங்கி குளித்துள்ளார்.

அப்போது ஓடையில் தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் மணிவேல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதுபற்றி தகவலறிந்த விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன், விழுப்புரம் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை 7 மணி வரை வாலிபர் கிடைக்கவில்லை. இரவு நேரமாகிவிட்டதால் தேடும் பணியை இன்று தொடர உள்ளனர்.

Related Stories: