×

இவ்வாறு அவர் கூறினார். கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்

கடலூர், நவ. 27: கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழி கிராமத்தை சேர்ந்த பெண் தனக்கு ெசாந்தமான பட்டா இடத்தை ஆக்கிரமிப்பு என கூறி மழை தண்ணீர் வடிய பள்ளம் தோண்டியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழி கிராமத்தை சேர்ந்த மாணிக்கவேல்ராஜ் மனைவி சிவகாமி(52). இவர் நேற்று தனது மகள் புவனேஸ்வரியுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார், பின்னர் அவர் திடீரென அலுவலக வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து கேட்டதற்கு அவர் வசித்து வரும் வீட்டு மனை தனக்கு சொந்தமானது ஆனால் சிலர் அந்த இடம் அரசு புறம் போக்கு இடம்  என கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதே ஊரைச் சேர்ந்த சிலர்  தேங்கியிருந்த மழை நீரை வடிய செய்ய பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியுள்ளனர். அவர் இது பட்டா நிலம் எனக்கு சொந்தமானது என கூறியும் அவர்கள் கேட்கவில்லை என தெரிகிறது.. அதனால் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஆட்சியரிடம் மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

Tags : protest ,Tarna ,Cuddalore Collectorate ,
× RELATED பேரூராட்சி பணியாளர்கள் அறிவித்த தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு