×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 55 பாதுகாப்பு முகாம்களில் 2013 பேர் தஞ்சம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை அண்ணா நகர் சர்ச் தெரு பகுதியில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கோனேரிக்குப்பம் ஏனாத்தூர் சாலை, ரங்கசாமி குளம், விளக்கடி கோயில் தெரு, மேட்டு தெரு, செட்டி தெரு, காமராசர் சாலையில் பஸ் நிலையம் அருகில், ரெட்டை மண்டபம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சரியான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் வெளியேறாமல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

மேலும், முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் செவிலிமேடு, ஓரிக்கை, ஜெம் நகர், கீழம்பி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
மாவட்டத்தில் முன்னெச்சரிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் பகுதியிலுள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியிலும், சமுதாய கூடத்திலும் மாவட்ட நிர்வாகத்தால் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். நேற்று மதியம் வரை 55 முகாம்களில் 406 குடும்பத்தை சேர்ந்த 477 பெண்கள் 294 குழந்தைகள் உட்பட 2013 பேர் தங்க வைக்கப்பட்டனர்.

Tags : refugees ,security camps ,Kanchipuram district ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்