×

திருத்தணி பகுதியில் நிவர் புயல் மழைக்கு 21 வீடுகள் சேதம்

திருத்தணி: திருத்தணி பகுதியில் நிவர் புயல் மழைக்கு 21 வீடுகள் சேதமாயின. திருத்தணியில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவலாங்காடு ஒன்றியத்தில் ஜாகிர்மங்கலம், திருவாலங்காடு , பூனி மாங்காடு, நெமிலி, பழையனூர், பொன் பாடி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசித்த இருளர் இன குடும்பத்தினர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக ஆற்காடு குப்பம் கிராமத்தில் அண்ணாமலை என்பருக்கு சொந்தமான மாட்டுக்கொட்டகை மேற்கூரை உடைந்து  விழுந்து பசு மாடு மற்றும் கன்று இறந்தது. மேலும் 21 வீடுகள் சேதமாயின.

இதேபோல் பனப்பாக்கம் கிராமத்தில் மின் கம்பத்தின் மீது மரக்கிளை ஒன்று உடைந்ததால் மின்வயர் அறுந்தது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் ராமாபுரம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அதனை உடனே சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரி உடைந்தால் வீடுகளும் விவசாய நிலங்களும் சேதமடையும் அபாயம் உள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருத்தணி மின்வாரியத்தினர் கிராமங்களுக்கு நேற்றுமுன்தினம் இரவு முதல் மின்விநியோகத்தை நிறுத்தினர்.   

Tags : houses ,storm ,area ,Nivar ,Thiruthani ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக வீடுகள் இடித்து அகற்றம்