திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் கடல் சீற்றம்

திருவொற்றியூர்: நிவர் புயல் காரணமாக திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மாதவரம் போன்ற பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் மரங்கள் முறிந்து விழுந்தன. குறிப்பாக, திருவொற்றியூர் கார்கில் நகர், வெற்றி நகர், ராஜாஜி நகர் போன்ற இடங்களில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. ஜோதி நகர் அருகே மணலி விரைவு சாலையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவொற்றியூர், எண்ணூரில் கடல் சீற்றத்தால் கடலோர பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

Related Stories:

>