திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

திருச்சி, நவ.27: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தின நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்திய ஜனநாயகத்தின் அடிநாதமாக விளங்கும் நமது இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட 71வது ஆண்டு தினத்தினை கொண்டாடுகின்ற வகையில் பல்வேறு நிகழ்வுகளை நடத்திட அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் முதல் நிகழ்வாக அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட தினமான நவ.26ம் நாள் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் இந்திய அரசியலமைப்பின் முகப்புரையினை அனைவரும் வாசித்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நேற்று காலை 11 மணிக்கு டிஆர்ஓ பழனிகுமார் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் திருச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதேபோல் பெல் நிறுவனத்தில் அரசியலமைப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற பொது மேலாளர் முரளி இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை ஆங்கிலத்தில் வாசித்தார். நிகழ்ச்சியில், அரசியலமைப்பின் முன்னுரை தமிழ், இந்தி மொழிகளில் வாசிக்கப்பட்டதுடன், அனைத்து ஊழியர்களும் அவரவர் பணியிடங்களில் அதனை வாசித்தனர். அரசியலமைப்பு தினத்தை ஒட்டி பல்வேறு இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

Related Stories:

>