×

திருச்சியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் காய்கறி விலை பல மடங்கு உயர்ந்ததால் மக்கள் அதிருப்தி

திருச்சி, நவ. 27: திருச்சியில் காந்தி மார்க்கெட்டை திறக்க கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சில்லறை கடைகளில் காய்கறி விலை பலமடங்கு உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். திருச்சியில் கொரோனா பரவல் காரணமாக காந்தி மார்க்கெட் 9 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதையடுத்து காய்கறி மொத்த மார்க்கெட் பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் இயங்கி வருகிறது. மேலும் தென்னூர் உழவர் சந்தை, செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகம், கே.கே.நகர் உழவர் சந்ைத உள்ளிட்ட இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகள் இயங்கி வருகிறது. கொரோனா தளர்வு அறிவிக்கப்பட்டும் திருச்சியில் காந்தி மார்க்கெட் மட்டும் திறக்க இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. காந்தி மார்க்கெட்டை திறக்க கூடாது, கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு இடமாற்ற வேண்டும் என்று திருச்சியை சேர்ந்த ஒருவர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கால் நீதிமன்றம் காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை விதித்தது.

இதற்கிடையே காந்தி மார்க்கெட்டை திறக்க கோரி வியாபாரிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். தொடர்ந்த கடந்த 3 தினங்களாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3வது நாளாக நேற்று போராட்டம் தொடர்ந்தது. இதனால் ஜி.கார்னர் மார்க்கெட் மற்றும் தற்காலிக மார்க்கெட்டுகள் திறக்கப்படவில்லை. 3 நாட்களாக மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளதால் திருச்சியில் சில்லறை விற்பனை கடைகளில் காய்கறி விலை பல மடங்காக உயர்ந்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி உறையூர், உழவர் சந்தை அருகே, சிந்தாமணி அண்ணா சிலை அருகே மற்றும் காந்தி மார்க்கெட் எதிரே சில்லறை கடைகள் இயங்கி வருகிறது.

மேலும், ஆங்காங்கே தள்ளுவண்டிகளிலும் காய்கறிகள் விற்கப்படுகிறது. இவர்கள் ஜி.கார்னர் மொத்த மார்க்கெட்டிலிருந்து காய்கறிகளை வாங்கி இருப்பு வைத்து விற்று வருகின்றனர். தற்போது மார்க்கெட் மூடப்பட்டுள்ளதாலும், குறைந்த அளவு இருப்பு உள்ளதாலும் இருக்கின்ற காய்கறிகளின் விலையை பல மடங்கு உயர்த்தி விற்று வருகின்றனர். அதன்படி நேற்று கிலோ ரூ.50க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.120க்கும், கேரட் ரூ.120, பீன்ஸ் ரூ.100, சின்னவெங்காயம் ரூ.100, வெண்டைக்காய் ரூ.40, உருளை ரூ.40, பீட்ரூட் ரூ.50, ரூ.20க்கு விற்ற தக்காளி ரூ.50க்கும் விற்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.திருச்சி, நவ. 27: திருச்சியில் காந்தி மார்க்கெட்டை திறக்க கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சில்லறை கடைகளில் காய்கறி விலை பலமடங்கு உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

திருச்சியில் கொரோனா பரவல் காரணமாக காந்தி மார்க்கெட் 9 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதையடுத்து காய்கறி மொத்த மார்க்கெட் பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் இயங்கி வருகிறது. மேலும் தென்னூர் உழவர் சந்தை, செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகம், கே.கே.நகர் உழவர் சந்ைத உள்ளிட்ட இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகள் இயங்கி வருகிறது. கொரோனா தளர்வு அறிவிக்கப்பட்டும் திருச்சியில் காந்தி மார்க்கெட் மட்டும் திறக்க இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. காந்தி மார்க்கெட்டை திறக்க கூடாது, கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு இடமாற்ற வேண்டும் என்று திருச்சியை சேர்ந்த ஒருவர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கால் நீதிமன்றம் காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை விதித்தது.

இதற்கிடையே காந்தி மார்க்கெட்டை திறக்க கோரி வியாபாரிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். தொடர்ந்த கடந்த 3 தினங்களாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3வது நாளாக நேற்று போராட்டம் தொடர்ந்தது. இதனால் ஜி.கார்னர் மார்க்கெட் மற்றும் தற்காலிக மார்க்கெட்டுகள் திறக்கப்படவில்லை. 3 நாட்களாக மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளதால் திருச்சியில் சில்லறை விற்பனை கடைகளில் காய்கறி விலை பல மடங்காக உயர்ந்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி உறையூர், உழவர் சந்தை அருகே, சிந்தாமணி அண்ணா சிலை அருகே மற்றும் காந்தி மார்க்கெட் எதிரே சில்லறை கடைகள் இயங்கி வருகிறது. மேலும், ஆங்காங்கே தள்ளுவண்டிகளிலும் காய்கறிகள் விற்கப்படுகிறது. இவர்கள் ஜி.கார்னர் மொத்த மார்க்கெட்டிலிருந்து காய்கறிகளை வாங்கி இருப்பு வைத்து விற்று வருகின்றனர். தற்போது மார்க்கெட் மூடப்பட்டுள்ளதாலும், குறைந்த அளவு இருப்பு உள்ளதாலும் இருக்கின்ற காய்கறிகளின் விலையை பல மடங்கு உயர்த்தி விற்று வருகின்றனர். அதன்படி நேற்று கிலோ ரூ.50க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.120க்கும், கேரட் ரூ.120, பீன்ஸ் ரூ.100, சின்னவெங்காயம் ரூ.100, வெண்டைக்காய் ரூ.40, உருளை ரூ.40, பீட்ரூட் ரூ.50, ரூ.20க்கு விற்ற தக்காளி ரூ.50க்கும் விற்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.தடை உத்தரவு நீக்க அறிவிப்பு காந்தி மார்க்கெட் இன்று திறப்பு?

திருச்சி காந்தி மார்க்கெட்டில் வழக்கில் நிவர் புயல் காரணமாக (நேற்று) தீர்ப்பு வராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் நேற்று வெங்காய மண்டியில் ஆலோசனை நடத்தினர். இதற்கிடையில் நேற்று மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தபோது இடைக்கால தடையை நீக்கி, காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் நடத்த தடை இல்லை என நீதிபதிகள் உத்தரவிட்டதாக காந்தி மார்க்கெட் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். தொடர்ந்து இன்று (27ம் தேதி) முதல் வழக்கம் போல் காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் நடக்கும் எனவும் கூறினர்.

Tags : Trichy ,traders ,closure ,
× RELATED திருச்சியில் போலி மது பாட்டில்கள் பறிமுதல்..!!