×

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.62.43 லட்சம் உண்டியல் காணிக்கை

மண்ணச்சநல்லூர், நவ.27: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் எண்ணப்பட்டதில் 62 லட்சத்து 43 ஆயிரத்து 512 ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் கணக்கிடப்பட்டன. சமயபுரத்தில் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் மாதமிருமுறை எண்ணப்படுகின்றன. கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் நேற்று மொத்தம் 18 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் உண்டியல் பணத்தை எண்ணி தங்கம், வெள்ளி நகைகள், அயல்நாட்டு கரன்சிகளை கணக்கெடுத்தனர். கணக்கெடுப்பின் முடிவில் உண்டியலில் ரொக்கமாக 62 லட்சத்து 43 ஆயிரத்து 512 ரூபாய், 1 கிலோ 457 கிராம் தங்க நகைகள், 1 கிலோ 950 கிராம் வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் 44 இருந்தன. இவை அனைத்தும் கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டன. இதற்கு முன்பாக கடந்த 11ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Samayapuram Mariamman Temple ,
× RELATED வரி விளம்பரங்கள் சமயபுரம் மாரியம்மன்...