×

திருச்சியில் எப்.எஸ்.எம்.எஸ் நிதி நிறுவனம் திறப்பு விழா

திருச்சி, நவ.27: திருச்சியில் எப்.எஸ்.எம்.எஸ் சேமிப்பு நிதி நிறுவன திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினார். முன்னிலை வகித்த முன்னாள் மேயர் எமிலிரிச்சர்டு முதல் விற்பனையையும், நிறுவனத்தின் செயல்பாடுகளையும் துவக்கி வைத்தார். வணிகர் நல ஒற்றுமை சங்க தலைவர் முகமது மீரான், செயலாளர் அய்யல்சாமி, பொருளாளர் சவரிமுத்து மற்றும் எப்.எஸ்.எம்.எஸ். நிறுவன தலைவர் ஆனந்த்கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக வரவேற்று பேசிய எப்.எஸ்.எம்.எஸ் நிர்வாக இயக்குனர் பிரேமி தலைமையேற்று வாடிக்கையாளர்களை சிறு சேமிப்பு மூலம் பொருளாதார நிலையில் உயர்த்தவும், தன்னம்பிக்கையுடன் வாழ்ந்திடவும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று கூறினார். நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள், முக்கிய பிரமுகர்கள், மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : FSMS Financial Institution Opening Ceremony ,Trichy ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் 506 பள்ளிகள் இன்று முதல் திறப்பு