×

வேளாண் உதவி இயக்குனர் தகவல் பயணிகள் யாருமின்றி

மன்னார்குடி, நவ.27: வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நேற்று முன்தினம் பிற்பகல் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புயல் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது.இதையடுத்து, அரசு போக்குவரத்துக்கழக மன்னை கிளை சார்பில் நேற்று மதியம் அனைத்து பேருந்துகளும் வழக்கமான வழித்தடங்களில் இயக்கப்பட்டன. பேருந்துகள் வரிசையில் அணிவகுத்து காத்திருந்தும் குறைந்த பயணிகள் நடமாட்டம் கூட இல்லாத நிலையில் பேருந்து நிலையமே வெறிச்சோடி காணப்பட்டது. ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மட்டும் கவலையுடன் பயணிகளின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தும் பலனில்லை. இதுகுறித்து ஊழியர்கள் சிலர் கூறுகையில், பேருந்து இயக்கம் குறித்து வெளியான தகவல் பொதுமக்களிடம் சென்றடையவில்லை. இதனால் பயணிகள் வருகையின்றி பேருந்து நிலையம் வெறிச்சோடி உள்ளது. நாளை முதல் அதிகளவில் பயணிகள் வருவார்கள் என நம்பிக்கையுடன் கூறினர்.

Tags : Assistant Director ,information travelers ,
× RELATED உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த வழிமுறைகள்