×

அரசியலமைப்பு தினம் புயல் அச்சம் நீங்கியதால் முகாம்களில் தங்கியிருந்தோர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு

நீடாமங்கலம், நவ.27: நீடாமங்கலம் ஒன்றிய பகுதிகளில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆதனூர் ஊராட்சி பெரியார் சமத்துவ புரத்தில் உள்ள முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு நேற்று காலை உணவு வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைக்கபட்டனர். இதேபோல ஆய்குடி, பொதக்குடி, எடகீழையூர், வடுவூர் வடபாதி உள்ளிட்ட பகுதிகளில் முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு நேற்று காலை உணவு வழங்கி அவரவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். முகாம்களை ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், தாசில்தார் மதியழகன், ஆணையர்கள் கலைச்செல்வன், ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உணவு வழங்கினர்.

Tags : camps ,home ,storm ,Constitution Day ,
× RELATED நாடு முழுவதும் 17ல் நடக்க இருந்த போலியோ...