×

வெறிச்சோடிய மன்னார்குடி பேருந்து நிலையம் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், நவ. 27: திருவாரூர் மாவட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் அரசின் விருதினை பெற நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் வகையில் சமூக மற்றும் வகுப்பு நலத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று முதலமைச்சர் மூலம் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2021ம் ஆண்டிற்கான குடியரசு தினத்திற்கு கபீர் புரஸ்கார் விருது பெறுவதற்கு திருவாரூர் மாவட்டத்தில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்டவாறு தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றிய நபர்கள் இதுதொடர்பான விண்ணப்பத்தினை திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட தங்களது விண்ணப்பத்தை நாளை (28ம் தேதி) மாலை 5 மணிக்குள் அதே மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Tags : bus stand ,Mannargudi ,
× RELATED பஸ்நிலையத்தில் பழுதான சாலை பயணிகள் கடும் அவதி