×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை திருவாரூர் மாவட்டத்தில் 882 முகாம்களில் 50 ஆயிரம் பேர் தங்கவைப்பு

திருவாரூர், நவ.27: திருவாரூர் மாவட்டத்தில் நிவர் புயல் எச்சரிக்கையையொட்டி 882 முகாம்களில் 50 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். நிவர் புயல் எச்சரிக்கையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 24 மற்றும் 25 தேதிகளில் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியினை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் கலெக்டர் அதுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்தார். அதன் பின்னர் தொடர்ந்து இரவு வரை அந்த வெள்ள கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து அலுவலர்கள் நடவடிக்கைகள் குறித்து கண்காணித்தார். அவருடன் கலெக்டர் சாந்தா, மாவட்டத்திற்கு என கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ், கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், டிஆர்ஓ பொன்னம்மாள் ஆகியோரும் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் கூறுகையில், புயல் எச்சரிக்கையையொட்டி மாவட்டத்தில் அனைத்து துறை சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கிடையே முதல்வர் பழனிசாமியும் அவ்வப்போது எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். மேலும் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 713 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வரப்பட்டனர். அதன்படி மாவட்ட முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 882 நிவாரண முகாம்களில் 25ம் தேதி  மதியம் வரையில் 10 ஆயிரத்து 741 பேர்கள் தங்கியிருந்த நிலையில் அதன் பின்னர் படிப்படியாக இரவு 10 மணி வரையில் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அனைத்து முகாம்களிலும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இது போன்று அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும் கட்சி சார்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுமாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளதையடுத்து மாவட்டத்தில் நிவாரண முகாம்களுக்கு வராமல் தாழ்வான பகுதிகளிலேயே தங்கியிருக்கும் பொதுமக்கள் மற்றும் மழையின் காரணமாக வேலையில்லாமல் இருந்து வரும் விவசாயம் உள்ளிட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் உடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் இருந்து வரும் 10 ஒன்றியங்கள் மற்றும் 4 நகராட்சி பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் உணவு கொண்டு செல்லப்பட்டு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி திருவாரூர் ஒன்றியத்தில் மாவூர், வேப்பத்தாங்குடி, வைப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு வாகனங்கள் மூலம் உணவு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : Communist ,district ,Thiruvarur ,camps ,
× RELATED விவசாயிகளை சிறையில் அடைக்கும் அதிமுக...