×

இட ஒதுக்கீடு அடிப்படையில் கோயில் காலிப்பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும் பூசாரிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்


மன்னார்குடி, நவ. 27: திருக்கோயில்களில் காலியாகும் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டும் என்று பூசாரிகள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கோயில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய திருக்கோயில்களில் காலியாகும் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு விதி முறைகள், மூலமே பணி நியமனம் மற்றும் பணி நிரந்தரம் நடைபெற வேண்டும். இதை பின்பற்றாமல் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய திருக்கோவில்களில் காலியாகும் பல்வேறு பணியிடங்களுக்கு பெறவேண்டியதை பெற்றுக்கொண்டு தினக்கூலி அடிப் படையில் உழியர்களை சம்பந்தப்பட்ட கோவில் அதிகாரிகள், தாங்களாகவோ அல்லது தக்கார் தீர்மானம் மூலமோ நியமனம் செய்துக் கொள்கின்றனர்.

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பிறகு அரசு சார்பில் சட்டப் பேரவையில் 110-வது விதியின் கீழ் வெளியிடப்படும் அறிவிப்பின் கீழ் அந்த தினக்கூலி பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு விடுகின்றனர். கல்வித் தகுதி, தகுதித் தேர்வு, தமிழக அரசின் இட ஒதுக்கீடு, நடைமுறை விதிகள் ஆகிய எந்தவித வழிமுறைகளும் பின்பற்றப்படாமல் இத்தகைய மறைமுகம் நியமனம் நடைபெற்றுவருவது, வேதனைக் குரியது. படித்து பட்டம் பெற்று ஏழ்மை நிலையில் சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் வேலையின்றி தவிக்கும் இந்து சமய இளைய பிரிவினர்களுக்கு இதனால் வேலைவாய்ப்பு பறிபோகிறது. எனவே கல்வித் தகுதி, இட ஒதுக்கீடு, தகுதி தேர்வு, ஆகிய சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே கோயில்களில் காலியாகும் பணியிடங்களுக்கு இந்து சமய இளைஞர்களை நியமனம் செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். அமைச்சர் காமராஜ் தகவல்

Tags : Priests' Union ,
× RELATED அவுட் சோர்சிங் முறையில் நடந்த மினி...