ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு புதிய வேளாண் சட்டங்களை கைவிடக்கோரி ஏர்கலப்பையுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, நவ. 27: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கைவிடகோரி அம்மாபேட்டை கடைவீதியில் ஏஐடியூசி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஏர் கலப்பையுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் புதிய வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும். புதிய உணவு கொள்கையால் விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்து வரும் நெல் கொள்முதல் கைவிடும் நிலை எற்பட்டுள்ளது, பொது வினியோக முறை கைவிடப்பட்டு ரேஷன் கடைகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலவச மின்சாரம் ரத்தாகிறது. இதை தடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சோமு, மாதர் தேசிய சம்மேளனம் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வி தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அனைத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்: நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தையொட்டி தஞ்சை பனகல் கட்டிடம் முன் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச மாவட்ட செயலாளர் சேவியர் தலைமை வகித்தார். ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் ராஜன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார் துவக்கி வைத்தார். சிஐடியூ மாநில செயலாளர் ஜெயபால் நிறைவுறையாற்றினார். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் மாடாகுடி செல்வராஜ் பேசினர்.

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: வங்கி ஊழியர்கள் சங்க சார்பில் தஞ்சாவூர் நிக்கல்சன் வங்கி முன் மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. டைபெற்றது. திருக்காட்டுப்பள்ளி: பூதலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் முகில் மற்றும் பலர் பங்கேற்றனர். கும்பகோணம்: கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏஐடியூசி தரைக்கடை வியாபாரிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட சிபிஐ செயலாளர் பாரதி, தேசிய தொலைதொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்ட தலைவர் விஐய் ஆரோக்கியராஜ், ஏஐடியூசி பட்டு கைத்தறி நெசவாளர் சங்க மாநில தலைவர் மணிமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: