×

அன்னவாசல் வட்டாரத்தில் பயிர் காப்பீடு செய்ய 30ம் தேதி கடைசி விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

இலுப்பூர், நவ.27: அன்னவாசல் வட்டாரத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநர் பழனியப்பா கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அன்னவாசல் வட்டாரத்தில் 2020-2021ம் ஆண்டுக்கான சிறப்புப் பருவம் நெல் சம்பா பயிர்கள் சாகுபடி செய்து வரும் நிலையில், விவசாயிகள் அனைவரும் சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் இயற்கை இடர்பாடுகளான வௌ்ளம், வறட்சி மற்றும் பூச்சி நோய் தாக்குதலினால் ஏற்படும் மகசூல் இழப்பு மற்றும் பாதிப்புகளிலிருந்து தாங்கள் வாழ்வாதாரத்தினையும், வருவாய் இழப்பினையும் சரிசெய்து கொள்ள திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறலாம்.

நெல் பயிர் காப்பீடு செய்ய ஏக்கருக்கு பிரீமிய தொகையாக ரூ.458 செலுத்தவும், அதற்கு பயிர் இழப்பு காப்பீடு தொகை அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.30,500 பெறலாம். காப்பீடு செய்ய தேவையான ஆவணங்களான முன்மொழிவு படிவம், பதிவு படிவம், அடங்கல, சிட்டா நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் ஆகியவற்றில் காப்பீடு தொகையை செலுத்தி பதிவு செய்யது பயன் பெறலாம். ஆகவே விவசாயிகள் வரும் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Tags : area ,Annavasal ,
× RELATED வாட்டி வதைக்கும்...