×

பொன்னமராவதியில் பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து சிஐடியூ ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, நவ.27: பொன்னமராவதியில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் தீன் தலைமை வகித்தார். சிஐடியூ ஒன்றிய பொறுப்பாளர் பகுருதீன், வாலிபர் சங்க ஒன்றிய பொறுப்பாளர் குமார், ஆட்டோ தொழிற் சங்க மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன் மற்றும் சிஐடியூ நிர்வாகிகள் கலந்து கொண்டு வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாகவும் விவசாய விரோத, தொழிலாளர் விரோத மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags : CITU ,Ponnamaravathi ,strike ,
× RELATED திருமயம் அருகே டிரைவருக்கு திடீர் வலிப்பு பஸ் மரத்தில் மோதி நின்றது