×

எம்எல்ஏக்கள் வழங்கினர் தொழிலாளர், விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை ரத்து செய்யகோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், நவ. 27: தொழிலாளர், விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்ப பெறக்கோரி அரியலூர் மாதா கோவில் அருகே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் தண்டபாணி, தொமுச மாவட்ட தலைவர் மகேந்திரன், சிஐடியூ மாவட்ட செயலாளர் துரைசாமி, ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் விஜயகுமார், ஹெச்.எம்.எஸ் மாவட்ட நிர்வாகி திருவள்ளுவர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு சாதகமாக, தொழிலாளர்களுக்கு எதிராக சட்ட திருத்தங்கள் செய்துள்ளதை திரும்ப பெற வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். கொரோனா கால நிவாரணமாக ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் வழங்க வேண்டும். 100 நாள் கிராமப்புற வேலைத்திட்டத்தை 200 நாட்களாக அதிகரித்து நகரங்களுக்கும் விஸ்தரித்து கூலியை உயர்த்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி, சிஐடியூ, சிபிஎம், தொமுச, ஐஎன்டியூசி, மாதர் சங்கம் மற்றும் எச்.எம்.எஸ்சை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பெரம்பலூர்: பெரம்பலூர் புதுபஸ்டாண்டு பகுதியில் புயல் காரணமாக மறியல்போராட்டம் கைவிடப்ப ட்டு அனைத்துத் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் எனப்படும் தொமுச மாவட்டகவுன்சில் செயலாளர் ரெங்கசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, கரும்பு விவசாயிகள் சங்க மாநிலதுணை செயலாளர் ராஜே ந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு அகிலஇந்தியப் பொது வேலை நிறுத்தம் குறித்து விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தொமுச மாவட்டகவுன்சில் தலைவர் குமார், மாவட்ட நிர்வாகி செல்வராஜ், சிஐடியூ மாவட்ட தலைவர் அகஸ்டின் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு தொழிற்சங்கத்தினர், சாலையோர வியாபாரிகள், மின் ஊழியர்கள், போக்குவரத்துத் துறை ஊழியர்கள், எறையூர் நேரு சர்க்கரை ஆலை ஊ ழியர்கள் கலந்துகொண்ட னர்.

Tags : demonstration ,unions ,
× RELATED புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்