×

அரியலூர், ெபரம்பலூரில் நடந்தது காலி பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு பொது வேலை நிறுத்தம் எதிரொலி ஆட்டோக்கள் ஓடாததால் மக்கள் கடும் அவதி

பெரம்பலூர், நவ.27:  மோட்டார் வாகன சட்டதிரு த்தத்தைத் திரும்பப் பெற வேண்டும். ஆட்டோ தொழி லை, தொழிலாளர்களைப் பாதுகாக்க, அனைத்து ஆட்டோ தொழிலாளர் குடும்பத் திற்கும் மாதத்திற்கு ரூ.7,500 என 6 மாதங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை, அணியாய இன்சூரன்ஸ் கட் டண உயர்வை வாபஸ்பெற வேண்டும். கொரோனா காலத்தில் தற்கொலை செய் து கொண்ட ஆட்டோ தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவார ணத் தொகையாக வழங்கிட வேண்டும். பொதுத் துறைகளைத் தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைக ளை வலியுறுத்தி (நவ 26ம் தேதி) நேற்று அகிலஇந்திய பொது வேலை நிறுத்தத்தி ற்கு அகிலஇந்திய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுக்க ப்பட்டிருந்தது.

இதன்படி மாவட்டத் தலைந கரான பெரம்பலூரில் நேற்று 26ம்தேதி காலை 6 ம ணி முதல் சிஐடியூ, எல்.பி.எப், விவேகானந்தா ஆட்டோ, ஷேர் ஆட்டோ, எளம்பலூர் ஆட்டோ தொழிற் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு ஆகியவற்றைச் சேர்ந் த 200க்கும் மேற்பட்ட ஆட் டோக்கள், ஷேர் ஆட்டோக் கள் பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், இயக்கப்படாமல் அந்தந்த ஆட்டோ ஸ்டாண்டுகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. பெரம்பலூ ர் புதுபஸ்டாண்டில் ஆட்டோ தொழிற்சங்களைச் சேர்ந்த சிஐடியூ, எல்பிஎப் நிர்வாகி கள்தங்கள்ஆட்டோக்களை நிறுத்திவைத்து விட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட சென்றனர். இதனால் காலையில் ஆட் டோக்கள், ஷேர் ஆட்டோக்களை நம்பியிருந்த பொது மக்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். பாடாலூர்,சிறுவாச்சூர், அக ரம்சீகூர் பகுதிகளில் கார்-டாக்சி ஸ்டேண்டு, டாட்டா ஏசி மினிவேன் ஸ்டேண்டு கள், டாட்டா மேஜிக் ஷேர் ஆட்டோக்களும் பொது வே லை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தன.

Tags : Ariyalur ,Perambalur ,
× RELATED அரியலூரில் குடியரசு தினவிழா கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்