×

விவசாயிகள் ஏமாற்றம் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை தீபமேற்ற 1,008 மீட்டர் திரிக்கு சாயமேற்றி உலர வைக்கும் பணி துவக்கம்

பெரம்பலூர், நவ. 27: கார்த்திகை தீபத்திருநாள் வருகிற 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுவதைபோல் பெரம்பலூர் மாவட்டத்தின் திருவண்ணாமலை எனப்படும் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதுகுறித்து பிரம்மரிஷி மலை அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள் அருளாசிபெற்ற சுந்தரமகாலிங்கம் சித்தர், தவசிநாதன் சித்தர் ஆகியோர் கூட்டாக தெரிவித்ததாவது: எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை மகா தீபத்தையொட்டி வருகிற 27, 28, 29ம் தேதிகளில் அகவல் பராயணம் நடக்கிறது. 29ம் தேதி 210 சித்தர்கள் யாகபூஜை, கோபூஜை, அஸ்வ பூஜை நடக்கிறது.

காலை 9 மணிக்கு தீபக்கொப்பரை பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து டிராக்டர் மீது வைத்து எளம்பலூர் காகன்னை ஈஸ்வரர் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. பின்னர் கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாலை 6 மணிக்கு பிரம்மரிஷிமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக 5 அடி உயர செம்பு கொப்பரையில், பசுநெய், இலுப்பைநெய், செக்கில் ஆட்டிய நல்லெண்ணை என 1008 லிட்டர் நெய்யை கொண்டு 108 கிலோ கற்பூரத்துடன், 1008 மீட்டர் திரியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது