×

கங்கைகொண்ட சோழபுரம் பாதுகாப்பு முகாமில் தங்கியோருக்கு சிறப்பு மருத்துவ முகாம்

அரியலூர், நவ. 27: வங்க கடலில் உருவான நிவர் புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டி மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிவர் புயல் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் ரத்னா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் ஆய்வு செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். பின்னர் அந்த பகுதியில் சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்தனர். வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமிதரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
கலெக்டர் ஆய்வு

Tags : camp ,residents ,security camp ,Gangaikonda Cholapuram ,
× RELATED கால்நடை முகாம் நடத்த கோரிக்கை