×

கரையை கடந்தது புயல் குளம்போல் அமைதியாக காட்சியளித்த கடல்

நாகை, நவ.27: நிவர் புயல் கரையை கடந்ததால் நாகையில் கடல் குளம் போல் காட்சியளிக்க தொடங்கியது. வங்கக்கடலில் உருவான நிவர் புயல் காரணமாக, நாகை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. நேற்று நிவர் புயல் புதுச்சேரிக்கும் மரக்காணத்திற்கும் இடையே கரையை கடந்தது. இதனால் ஆக்ரோஷத்துடன் எழுந்த கடல் அலைகள் நேற்று காலை முதல் அமைதியானது. மேலும் நாகை துறைமுகப் பகுதியில் கடல் குளம் போல் காட்சி அளிப்பதால் மீனவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கடலோர பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அங்கு முகாமிட்டிருந்த பேரிடர் மீட்பு படையினர் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதால் தங்களது அலுவலகத்தை நோக்கி திரும்ப தொடங்கினர்.

Tags : sea ,shore ,
× RELATED தமிழக கடல் பகுதியில் சீ விஜில் ஒத்திகை நிகழ்ச்சி