×

லாரிகளுக்கு காலாண்டு வரி ரத்து செய்ய வலியுறுத்தல்

கொள்ளிடம், நவ.27: லாரிகளுக்கு காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என்று லாரி உரிமையாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே எருக்கூரில் தாலுகா அளவிலான லாரி உரிமையாளர்கள் சங்க கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வேலு தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் தங்கமணி வரவேற்றார். செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் மனோகரன், துணைச் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வெளிமாவட்ட லாரி உரிமையாளர்களை சங்கத்தில் சேர்ப்பதில்லை, உறுப்பினர்கள் இரண்டு லாரிகளுக்கு மேல் வாங்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் லாரிகளுக்கு விதிக்கப்படுகின்ற காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதியில் அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும். அரிசி, உரம் உள்ளிட்ட பொருட்களை சீர்காழி தாலுகாவில் உள்ள பகுதியில் ரயில் தலைப்பில் இறக்கவேண்டும். சீர்காழி தாலுக்கா திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் ரகங்களை வெளி மாவட்டம் மற்றும் சென்னைக்கு எடுத்துச் செல்ல தரைவழி மட்டுமே பயன்படுத்த வேண்டும். சீர்காழி தாலுகாவில் மணல் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதியில் லாரிகள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி செய்ய அரசு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க செயற்குழு உறுப்பினர் அமுதன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED பிரபல மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்