×

நாகை மாவட்டத்தில் 143 குடிசை வீடுகள் நிவர் புயலால் சேதம்

நாகை, நவ.27: நிவர் புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 143 குடிசை வீடுகள் முழுமையாக சேதமைடந்துள்ளது என வருவாய்த் துறை கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் நிவர் புயல் மற்றும் மழை காரணமாக நாகை தாலுகாவில் 33 வீடுகள் சேதமாகியுள்ளன. கீழ்வேளூர் தாலூகாவில் 14 வீடுகளும், திருக்குவளையில் ஒரு வீடும், மயிலாடுதுறையில் 26 வீடுகளும், சீர்காழியில் 37 வீடுகளும், தரங்கம்பாடியில் 34 வீடுகளும் சேதமாகியுள்ளன. கால்நடைகளை பொறுத்தவரை, 4 மாடுகள், 22 ஆடுகள், 12 கன்றுகள் என 38 கால்நடைகள் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சீர்காழி வட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. நாகை மாவட்டத்தில் 143 குடிசை வீடுகள் முழுமையாக சேதமாகியுள்ளது. 7 கான்கிரீட் வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : houses ,district ,Naga ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக வீடுகள் இடித்து அகற்றம்