×

நிவர் புயல் சின்னம் எதிரொலி மழையின்றி வானம் மேக மூட்டம்

கரூர், நவ. 27: நிவர் புயல் சின்னம் காரணமாக கரூரில் பெரியளவில் மழை இல்லை என்றாலும் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தமிழகம் முழுவதும் நிவர் புயல் சின்னம் காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாமல்லபுரம் அருகே நேற்று அதிகாலை புயல் கரையை கடந்துள்ளது. இந்நிலையில் புயல் சின்னம் எதிரொலியாக கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று இரவு வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் பெரியளவில் மழையில்லை என்றாலும் அவ்வப்போது லேசான அளவில் சாரல் மழை பெய்தது. இந்த சீதோஷ்ண நிலை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Nivar ,sky ,
× RELATED டெல்டாவை அடுத்தடுத்து தாக்கிய நிவர்......