×

மர்ம நபருக்கு வலை புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கரூர், நவ. 27: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசு, பொதுத்துறை ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் ஜெயராஜ், கணேசன், விஸ்வநாதன், வெங்கடேசன், சாமுவேல் சுந்தரபாண்டியன், ஜான்பாட்ஷா உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020ஐ கைவிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர், வேலாயுதம்பாளையம், குளித்தலை ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags : Coalition ,Government Employees ,Teachers Associations Demonstrates ,
× RELATED எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும்...