×

கலெக்டர் அறிவிப்பு அரவக்குறிச்சியில் கொடுக்கல் வாங்கல் தகராறு கோஷ்டி மோதலில் வாலிபருக்கு வெட்டு

அரவக்குறிச்சி, நவ. 27: அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசை சேர்ந்தவர் கண்ணன்(40). கரூர் வெண்ணெய்மலையை சேர்ந்த லீலாகுமரன் என்பவரது மகன் விக்னேஷ்(32). இவர் கருரில் ஆட்டே கேரேஜ் நடத்தி வருகிறார். இவருக்கு கார் வேலை செய்த வகையில் கண்ணன் பணம் பாக்கி தர வேண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் அரவக்குறிச்சி ராஜபுரம் ரோட்டில் உள்ள அரசு மதுபானக்கடை அருகில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விக்னேசுடன் வந்த கரூர் நெரூரை சேர்ந்த சுபிக்க்ஷன்(22) என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அவர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Collector ,dispute ,conflict ,teenager ,
× RELATED கரூர் மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் ...