×

தோகைமலை அருகே பைக் மீது கண்டெய்னர் லாரி மோதல் மனைவி கண்முன் கணவன் பலி

தோகைமலை, நவ. 27: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள நாடக்காபட்டியை சேர்ந்தவர் முனியப்பன்(45). மணப்பாறையில் உள்ள துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் முனியப்பனும் இவரது மனைவி பஞ்சவர்ணமும்(37) மணப்பாறைக்கு சென்றுவிட்டு மீண்டும் தங்களது ஊருக்கு பைக்கில் வந்து உள்ளனர். மணப்பாறை குளித்தலை மெயின்ரோட்டில் உள்ள சின்னரெட்டிபட்டி அருகே வந்தபோது அதே ரோட்டில் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி பைக் மீது மோதி நிற்காமல் சென்று உள்ளது. இதில் இருவரும் கீழே விழுந்ததில் முனியப்பனுக்கு படுகாயம் ஏற்பட்டு உள்ளது. அருகில் இருந்தவர்கள் முனியப்பனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர;. அங்கு சிகிச்சை பலனின்றி முனியப்பன் இறந்து உள்ளார். இதுகுறித்து பஞ்சவர;ணம் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் முனியப்பன் மீது மோதி நிற்காமல் தப்பி சென்ற கண்டெய்னர் லாரியை அருகில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Tokaimalai ,
× RELATED பைக் திருட்டு