×

துவரை செடிக்கு மருந்து தெளிப்பு விவசாயிகள் மும்முரம்

தர்மபுரி, நவ.27: தர்மபுரி மாவட்டத்தில் துவரை சாகுபடி ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தொடங்குகிறது. மார்கழி அல்லது தை மாதத்தில் அறுவடை தொடங்கிவிடும்.தற்போது துவரை பூ பூத்து குலுங்குகிறது.மாவட்டம் முழுவதும் பருப்பு வகை பயிர் 19 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. தற்போது துவரம் பருப்புக்கு மார்க்கெட்டில் அதிக விலை கிடைப்பதால்,பெரும்பாலான விவசாயிகள் துவரை பயிரிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு ஆகிய பகுதியில் துவரை சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது.கடந்த புரட்டாசி, ஐப்பசி மாதத்தில் பெய்த மழையால்,தர்மபுரி அடுத்த இண்டூர், பாலவாடி பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் துவரை சாகுபடி செய்துள்ளனர். தற்போது துவரை செடிகள் நன்கு வளர்ந்து பூத்து குலுங்கிய நிலையில் உள்ளது.இதனால், பூச்சிகளில் இருந்து செடிகளை பாதுகாக்கும் வகையில், துவரை செடிகளில் பூச்சி மருந்து அடிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags :
× RELATED விவசாயிகளுக்கு அழைப்பு