×

விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, நவ.27: தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன், அகில இந்திய விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் அருச்சுணன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் டில்லி பாபு, அகில இந்திய விவசாயிகள் மகா சபாவின் மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரைஸாமேரி, மாவட்ட தலைவர் ஜெயா, மக்கள் ஜனநாயக தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மாதையன். மாற்று திறனாளிகள் மாநில பொருளாளர் சக்ரவர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் பூபதி மற்றும் வில்கிருஷ்ணன் பெரியண்ணன், ரத்தினவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,unions ,
× RELATED விவசாயிகளுக்கு ஆதரவாக சிஎப்ஐ ஆர்ப்பாட்டம்