×

மத்திய- மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஓசூர், நவ.27: மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து, ஓசூர் ராம் நகரில் சிஐடியூ, தொமுச, ஐஎன்டியூசி, அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம்  சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐஎன்டியூசி மாநில தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். எல்பிஎஃப் மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் பீட்டர், அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் கோவிந்தம்மா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோர்  கண்டன உரையாற்றினர். தொமுச நிர்வாகி சிவகுமார், சிஐடியூ நிர்வாகிகள் ஆறுமுகம் மற்றும் ராமு, நடைபாதை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், கிருஷ்ணன், அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் புவனேஸ்வரி, கஸ்தூரி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர் உட்பட கலந்து கொண்டனர்.  

Tags : Demonstration ,State ,Central ,Governments ,
× RELATED மத்திய- மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்