×

கணவர், குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

கிருஷ்ணகிரி, நவ.27: நாகரசம்பட்டி அருகே கணவர், குழந்தைகள் இறந்த துக்கத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனபள்ளி அருகே ஆஞ்சகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன் மனைவி சத்யா(எ)சசிகலா(27). கூலி தொழிலாளி. இவர்களுக்கு 8 ஆண்டுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், மகள் இருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில், நாகேந்திரன் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, சத்யாவின் குழந்தைகளும் உடல் நலக்குறைவால் அடுத்தடுத்து உயிரிழந்தனர். கணவன் மற்றும் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால், சத்யா மனவேதனையில் இருந்து வந்தார்.இதையடுத்து, நாகரசம்பட்டி அருகே தட்டக்கல் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 24ம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே, அவரை அக்கம்-பக்கத்தினர் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி, சத்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : suicide ,children ,
× RELATED உரிய இழப்பீடு வழங்ககோரி மனு...